திருக்குறள்

தேடல்

சொர்கமும்... நரகமும்...

|

வயல்வெளி பார்த்து...
வறட்டி தட்டி......
ஓணாண் பிடித்து...
ஓடையில் குளித்து...
எதிர்வீட்டில் விளையாடி...
எப்படியோ படித்த நான்,
ஏறிவந்தேன் நகரத்துக்கு!


சிறு அறையில் குறுகிப் படுத்து...
சில மாதம் போர்தொடுத்து...
வாங்கிவிட்ட வேலையோடு...
வாழுகிறேன் கணிப்பொறியோடு!

சிறிதாய்த் தூங்கி...
கனவு தொலைத்து...
காலை உணவு மறந்து...
நெரிசலில் சிக்கி...
கடமை அழைக்க...
காற்றோடு செல்கிறேன்,
காசு பார்க்க!

மனசு தொட்டு...
வாழும் வாழ்க்கை,
மாறிப் போகுமோ?

மௌசு தொட்டு...
வாழும் வாழ்க்கை,
பழகிப் போகுமோ?

வால்பேப்பர் மாற்றியே,
வாழ்க்கை தொலைந்து போகுமோ?
சொந்த பந்த,
உறவுகளெல்லாம்,
ஜிப் (Zip) பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா?
அவனே,
சொர்க்கம் கண்டவனடா!

படித்ததில் பிடித்தது

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) ஆரோக்கியம் (8) ஆவணங்கள் (6) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (17) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (9) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) செய்தி (9) தமிழர் பண்பாடு (3) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (4) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தீபம் (1) துணுக்கு (11) நகைச்சுவை (27) நகைச்ச்சுவை (2) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (38) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (1) பெண்பார்க்கும் படலம் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (20) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (22) வாழ்கை (13) வாழ்க்கை (4) வாழ்த்துகள் (9) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB